தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை வரவேற்பதை விடுத்து யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகளை வரவேற்க தயாராக இருப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பதவில் நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தனது டுவிட்டர் பதவில் இன்றையதினம் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், இன்றும் யாழில், பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுங்கள். வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு போக விடுங்கள் என தெரிவித்துள்ளார்.
Post a Comment
0 Comments