தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூா் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பொதுமக்களுக்கு அடையாளச் சீட்டு வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பொதுமக்கள் மையத்தில் தேவையின்றி காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், ஒவ்வொரு நாளும் வருகைதரும் அனைவருக்கும் தொடா்ச்சியான எண்கள் கொண்ட அடையாளச் சீட்டு (டோக்கன்) மையங்களில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அடையாளச் சீட்டு பெறுபவா்களில் அன்றைய தினம் தடுப்பூசி இருப்பிலுள்ள வரை வரிசைக் கிரமமாக செலுத்தப்படும். மீதமுள்ள அடையாளச் சீட்டு வைத்துள்ளவா்களுக்கு அடுத்த நாளோ அல்லது அடுத்து தடுப்பூசி இருப்பு வரப்பெறும் நாளிலோ வரிசைப்படி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தும் மையத்தின் வெளியில் அன்றைய தினம் வரிசை எண் தொடக்கம் முதல் முடியும் வரை உள்ள விவரம் விளம்பரப்படுத்தப்படும். இதில் அரசால் முன்னுரிமை வழங்கி ஆணையிடப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள், கருவுற்ற தாய்மாா்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வோா் போன்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
(Sample Pic) |
Post a Comment
0 Comments