வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடிகர் சிம்பு மாறியுள்ள தோற்றம் ரசிகர்களிடம் ஆச்சர்த்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மனுசன் என்னமாய் வேலை பார்த்திருக்காரு,, உண்மையில் மிகமிக அசாத்தியான உழைப்பு என்று பாராட்டதவர்களே இல்லை. ட்விட்டரில் தற்போது சிம்பு தான் டாப் டிரெண்டாகி வருகிறது.
சிம்பு என்றாலே சர்ச்சையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. தயாரிப்பாளர்கள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது. அதனால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து எப்போது மீண்டு வருவார் என்று அவரது ரசிகர்கள் பலர் ஏக்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்,
சிம்பு தோற்றம்
இந்நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்காக சிம்பு உடலை கடுமையாக குறைத்திருக்கிறார். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி உடல் எடையை குறைத்திருக்கிறார்,
பல கிலோ குறைப்பு
அதாவத சிம்பு 100 கிலோ இருக்கிறார் என்றால் இதில் 50 கிலோ என்கிற அளவிற்கு குறைத்திருப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் சிம்பு இன்று வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அந்த அளவிற்கு உடல் எடை குறைந்து காணப்படுகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசை
வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பாடலாசிரியராக தாமரை பணியாற்றுகிறார் நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது.
Post a Comment
0 Comments