Type Here to Get Search Results !

Live

-----------------------------------------------------------------
WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 ***************************************** ***********************************************

சுயபடம்(Selfie) எடுக்க முயன்ற 16 பேர் மின்னல் தாக்கி உயிரிழப்பு: இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் (Jaipur) நகரில் மின்னல் தாக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
Lightning over JaipurIMAGE COPYRIGHT
age captionNUR PHOTO

மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அமர் கோட்டையிலுள்ள (12th Century Amer Fort) கோபுரத்தின் மேலே ஏறி செல்ஃபி (Selfie) எடுக்க முற்பட்ட வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கோபுரத்தின் மீது 27 பேர் இருந்ததாகவும் அவர்களில் பலர் கீழே பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது உயிரிழந்தவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவுள்ளதாக மாநிலத்தின் முதலமைச்சர் Ashok Gehlot அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக மின்னல் தாக்கி சுமார் 2,000 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big