வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 வருடங்களுக்கு மேலாகியும் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இனிமேலும் தங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தான் கடலினுள் மூழ்கி உயிரை விடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்திருந்தனர்.
அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1,604 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களுடைய போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை காலமும் தமக்கு எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்றும் உடனடியாக தமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Social Plugin
Social Plugin