தமிழர்களின் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது. என காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இன்று(20) இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “முதலில், கொரோனா தடுப்பூசி அனுப்பிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
எங்கள் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது, குறிப்பாக, வேளாண்மை, வணிகம், மீன்பிடித்தல், கட்டமைப்புகள் சிதைவடைந்துள்ளன.
20 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். எனவே ஒரு பொருளாதாரத்தை உருவாக்க தமிழர்களுக்கு அதிக ஆற்றல் உள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகளாக, தமிழர்களின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கையிலிருந்து எந்த உதவியும் முயற்சியும் செய்யப்படவில்லை.
அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தமிழர்களின் பொருளாதாரத்திற்கு உதவுமாறு இன்று நாங்கள் கேட்டு கொள்கிறோம்.“ எனக்குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment
0 Comments