உணவே மருந்து என்பது உண்மையான விசயம் என்றாலும், வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே தீமை விளைவிப்பதாக மாறிவிடும்.
உணவே மருந்து என்பது உண்மையான விசயம் என்றாலும், வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே தீமை விளைவிப்பதாக மாறிவிடும். கத்தியை சரியாக கையாளவிட்டால், பிடித்திருக்கும் கையையே பதம் பார்த்து விடுவதைப் போலத் தான் உணவும். ஊட்டம் கொடுக்கும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவும் உண்ணக்கூடாத வேளையில் உண்டால், உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
காலை வேளையில் சாப்பிடக்கூடாத பழங்களில் முக்கியமானது சிட்ரஸ் பழங்கள் ஆகும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லவை. உடலுக்கு ஊட்டம் கொடுக்கக்கூடியவை.
ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை உண்டால், அது வயிற்றில் அமிலத் தன்மையை அதிகரிக்கும். அசிடிட்டியை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்றவற்றை உண்டாக்கிவிடும். எனவே காலை வேளையில் சிட்ரிக் பழங்களை சாப்பிடவேண்டாம்.
காரமான உணவுகள் காரமான உணவுகள் உடலுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படும் மற்றும் இரைப்பையின் உட்பகுதி கடுமையாக பாதிக்கப்படும்.
மாக்னீசியம் சத்தை அபரிதமாகக் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்து, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். நெஞ்சடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.அதேபோல் காலையில் பச்சை காய்கறிகளையோ, சாலடையோ சாப்பிடுவது உடம்புக்கு உகந்ததல்ல. சாலடில் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளதால் அவை நெஞ்செரிச்சலை உண்டாக்கும். அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தற்கான வாய்ப்புகளும் அதிகமாம்.
தக்காளியில் டானிக் அமிலம் உள்ளது. டானிக் அமிலத்தால் வயிற்றில் அசெளகரியம், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே காலையில் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மருத்துவர்களும் பரிந்துரைக்கும் பழம் பேரிக்காய். ஆனால் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால், வயிற்று வலி ஏற்படும் என்பதால் காலை வேளையில் பேரிக்காயை பெரிதாக விரும்பவேண்டாம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.