Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

நடிகர் விவேக்கின் உடல் காவல்துறையின் மரியாதையுடன் தகனம்!

சுமார் 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிப்போடு சிந்தனைகளையும் விதைத்த நகைச்சுவை நடிகர் காலஞ்சென்ற விவேக்கின் பூதவுடல் இன்று மாலை மேட்டுக்குப்பம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி தனது 59 ஆவது வயதில் இன்று(17) அதிகாலை காலமானார்.

சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தினர்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  மற்றும் ஏஆர் ரகுமானும் சமூக வலைத்தளங்களில், விவேக்கு கண்ணீர் அஞ்சலி என்று பதிவிட்டார்.

 
இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல்வாதிகளும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.


இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை ஏந்திச் சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியமை பலரையும் நெகிழச் செய்தது.

நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையைக் கௌரவிக்கும் வகையில் அவரது உடல் பொலிஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இதன்போது அவருக்காக 78 மரியாதை வேட்டுக்களும் தீரக்கப்பட்டன.
1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி பிறந்த விவேக், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இறுதி சடங்குகளை செய்த மகள்

மின் மயானத்தில் நடிகை ரேகா, டிவி நடிகை நிலானி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. பின்னர் உள்ளே கொண்டு வரப்பட்ட விவேக்கின் உடலுக்கு மகள் தேஜஸ்வினி இறுதி சடங்குகளை செய்தார்.

இளைய மகள்

இளைய மகள்

மகன் இல்லாத நிலையில் அவரது இளைய மகள் அணிந்திருந்த உடையின் மீது வேட்டியை கட்டிக் கொண்டு இறுதி சடங்குகளை செய்தார். தகனமேடையில் வைக்கப்பட்ட விவேக்கின் முகம் மூடப்பட்ட நிலையில் அவரது உடலை தொட்டு பார்த்த தேஜஸ்வினி அழுதார்.

கற்பூரம் ஏற்றிய மகள்

கற்பூரம் ஏற்றிய மகள்

அவரை நடிகை நிலானி தேற்றினார். பின்னர் அவரது உடலுக்கு சந்தன கட்டைகள் வைத்து நெய்யை ஊற்றினார். இதையடுத்து கற்பூரத்தை வைத்து ஏற்றினார். அப்போது தேஜஸ்வினி கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது. விவேக்கின் உடல் எரிந்து கொண்டே மெஷினி மூலம் உள்ளே சென்றது. அதை பார்த்து துக்கம் தாளாமல் அழுத தேஜஸ்வினியை கட்டி அணைத்தபடி நடிகை நிலானி ஆறுதல் கூறி அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றார்.



பத்மஶ்ரீ விருது
தமிழக அரசின் கலைவாணர் விருது, தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, Filmfare விருது என பல விருதுகளும் அவரைத் தேடி வரத் தவறவில்லை.

200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள விவேக் சுமார் 35 வருடங்கள் திரைத்துறையில் கோலோச்சினார்.
வெறுமனே சிரிப்பிற்கான நகைச்சுவை மாத்திரமன்றி, பொதுநலன் கருதிய ஆழமான கருத்துக்களையும் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
விவேகானந்தன் எனும் இயற்பெயருடைய விவேக், சுவாமி விவேகானந்தர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் சிந்தனையின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரில் ‘க்ரீன் கலாம்’ எனும் மர நடுகைத் திட்டத்தை ஆரம்பித்தார்.
அப்துல் கலாமின் வேண்டுகோளை ஏற்று, ஒரு கோடி மரம் நடும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை விவேக்கை சாரும். 


இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கு விவேக் முன்நின்றதுடன், அவரைப் பின்பற்றி இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.



Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big