தேர்தல் பிரசாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரத் தடை!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை எந்த வகையிலும் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு வருவதாக விமர்சித்த மம்தா பானர்ஜி (Mamata Banerjee), தேர்தல் நடத்தை விதிகளை மோடி நடத்தை விதிகள் என மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு எட்டு மணி வரை மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநில முதலமைச்சருக்கு தடை விதித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை (Model Code of Conduct (MCC)) மீறியதற்காக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையம் (Election Commission) திங்கள்கிழமை (ஏப்ரல் 12) 24 மணி நேர தடை விதித்தது. இது மம்தா பானர்ஜிக்கு வழங்கப்பட்ட மூன்றாவது அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கையால் எழுதப்பட்ட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில் தவறானவை, எந்தவொரு அனுபவ ஆதாரமும் இல்லாமல் மற்றும் பொருள் இல்லாதவை என்பது அனைத்து அறிக்கைகளின் ஆய்விலும் இருந்து தெளிவாகத் தெரிகிறது: மத அடிப்படையில் வாக்களிப்பதான குற்றசாட்டு தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த கேள்விகளுக்கு ECI பதிலளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு, திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress) மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.
நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றபோது, கூச் பிகாரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அந்த இடத்திற்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் (Election Commission) அறிவுறுத்தலை வெளியிட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் நடத்தை விதிகளை மோடி நடத்தை விதிகள் எனத் தேர்தல் ஆணையம் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
Post a Comment
0 Comments