Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

மே 1 முதல் சிறப்பு முகாம்: அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - தமிழக அரசு

 தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

அதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் அறிவித்தபடி அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த முடியுமா என்பதில் கேள்வி நிலவியது.


தமிழக அரசு அறிக்கை

இந்நிலையில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. எனவே, பொதுமக்கள், நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து தங்கள் பணியாளர்களில் 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவதை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழகத்தில் இலவச தடுப்பூசி

தமிழகத்தில் இலவச தடுப்பூசி

ஏற்கெனவே அறிவித்தபடி இலவசமாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும். இதற்கான முழுவ செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். மாநிலத்தில் கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி

முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி

18 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து கட்டடத் தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்துக்கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். இதற்கான இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே 1 தேதி முதல் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.

மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்

மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்

தற்போது 45-60 வயதுள்ள 13 சதவீதம் பேருக்கும், 60 வயதுக்கு மேல் உள்ள 18 சதவீத பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கு ஏற்ப, மருத்துவ கட்டமைப்பு வசதிகள், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்ப்பு சக்தி

எதிர்ப்பு சக்தி

மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளும் தேவைக்கு ஏற்ப உயர்த்தப்படும். மேலும், பொதுமக்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி 60 சதவீதத்திற்கு மேல் உருவாக்க, சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அனைவருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை 60 சதவீதத்திற்கு மேல் ஏற்படுத்துவதே அரசின் முக்கிய குறிக்கோள்" எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big