Type Here to Get Search Results !

#HappyNewYear2025

#HappyNewYear2025
#HappyNewYear2025 #HappyNewYear #2025

ssss

WeLComeToSOORIYAN
@Sooriyantv24

தேர்தல் அறிக்கைகளால் மோதிக்கொள்ளும் திமுக Vs அதிமுக !

குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்கிற திட்டத்தை முதன் முதலில் மேடையில் அறிவித்தவர் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன். ஆனால் முதலில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை என அறிவித்தது திமுகவின் தேர்தல் அறிக்கை.

இதனால் அதிர்ந்துபோன அதிமுக இல்லத்தரிகளுக்கு 1500/- ரூபாய் மாத ஊதியம் என்றும் 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் என்றும் அறிவித்து தமிழக தேர்தல் களத்தை ‘ஏமாற்றுக் களமாக’மாற்றியிருக்கின்றன கழகங்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்த தேர்தல் அறிக்கை மோதலில் பல நகைச்சுவை காட்சிகளும் தமிழகத்தில் அரங்கேறியிருக்கின்றன. அதில் முதல் நகைச்சுவை உபயம் தமிழக பாஜக. குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “அது சாத்தியமில்லாத திட்டம்” என்றார். இப்போது அதிமுக 1,500 ரூபாய் அறிவித்திருக்கிறது. இதற்கு என்ன சொல்வார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு “வேறு கேள்வி கேளுங்க..” என்று சொல்லி அசடு வழிந்திருக்கிறார். ஏனென்றால் டிசைன் அப்படி.

இரண்டாவது நகைச்சுவை சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபாட்ட எடப்பாடிப் பழனிச்சாமி. “ தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் கசிந்துவிட்டது” என்று சிரித்தபடி சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்.’ என்று ஒருபடி மேலே போய்விட்டார் கமல்.

நடிகர் சங்கத்தில் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்ட சரத்குமாருடன் கமல் கூட்டணி வைத்ததை ஏற்கெனவே கலாய்த்துவரும் நெட்டிசன்கள், திமுக, அதிமுகவை மீம்ஸ்களாலும் பஞ்ச்களாலும் பதம் பார்த்து வருகிறார்கள். ஒரு நெட்டிசன் ‘திமுக தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை நிரந்தமாக முடுவது பற்றி ஏன் எதுவும் குறிப்பிடவில்லை? ஏனேன்றால் திமுக குடும்பம், டி.ஆர்.பாலு ஆகியோரிடம் மதுபான தயாரிப்புத் தொழிற்சாலைகள் இருப்பதால்தானே ?’ என்று கேட்டிருக்கிறார்.

இவை ஒரு பக்கம் இருக்க கடந்த முறை ‘குடும்ப அட்டைக்கு இலவச செல்போன், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை இப்படி ஏற்கெனவே அறிவிச்ச அறிவிப்புகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டீர்களா?’ என்றும் கேட்டுத் துளைக்கிறார்கள் நெட்டிசன்கள். இப்போதுதான் உண்மையாகவே களம் தேர்தல் நகைச்சுவையால் அதிர்ந்துகொண்டிருக்கிறது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big