செய்துள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை சூயஸ் கால்வாயின் இரு பக்கங்களிலும் இக்கப்பல் மோதிக் கொண்டு நடுவே நின்றுபோனது. இதனால் உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
சீனாவிலிருந்து நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்கு இந்த கப்பல் சென்றபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த கப்பலில் பல நாட்டு ஊழியர்கள் வேலை செய்பவர்களாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி இந்த கப்பல் சிக்கியது, ஏன் சூயஸ் கால்வாய் முக்கியமான போக்குவரத்து வழித்தடம் என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
சூயஸ் கால்வாய் என்றால் என்ன, அதை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?
இது எண்ணெய் சப்ளை உட்பட சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியமான வழித்தடமாக மாறியது.
சூயஸ் கால்வாய் முக்கியம்
இந்த வழித்தடத்தின் முக்கியத்தை உணர்ந்து, சூயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக்கியது. எனவே, 1956ம் ஆண்டில், இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை, எகிப்து மீது படையெடுத்தன. அதை கைப்பற்ற முயன்றன. ஆனால், பின்னர் அவர்களின் படைகள் பின்வாங்கின. 2015 ஆம் ஆண்டில், எகிப்து நாடு இந்த கால்வாயில் பெரும் புனரமைப்பைத் தொடங்கியது. சில மதிப்பீடுகளின்படி, உலகளாவிய வர்த்தகத்தில் 12% இப்போது சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடக்கிறதாம்.
கப்பல் எவ்வாறு சிக்கியது?
சரக்கு கப்பல்கள் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக சூயஸ் கால்வாயின் குறுகிய பாதையை ஒவ்வொன்றாகக் கடக்கின்றன. அதாவது சின்ன பாலமாக இருந்தால் நாம் வாகனத்தை எப்படி ஒவ்வொன்றாக ஓட்டிச் சென்று கடப்போமோ அதுபோல. ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த பகுதியில் கடும் மணல் புயல் வீசியுள்ளது. இதனால் கப்பல் மாலுமியால் ரூட்டை பார்க்கவே முடியாத அளவுக்கு மோசமான சூழல் நிலவியுள்ளது. கடும் காற்றால் கப்பலை காப்பாற்றத்தான் மாலுமி முயன்றாரே தவிர ரூட்டை சரியாக கணிக்கவில்லை. இதனால் கப்பல் மணல் பரப்பில் சிக்கியுள்ளது.
ஈபிள் டவர் நீளம்
இருப்பினும் வேறு ஏதாவது நடந்ததா என்பதற்குப் பின்னால் உள்ள சரியான விவரங்களை இன்னும் அறிய வேண்டியுள்ளது.
இந்த கப்பல் ரொம்பவே நீளமானது. ஒரு ஈபிள் கோபுரத்தை விட பெரியது. கப்பல் கால்வாயைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீளத்தில்தான் இந்த கப்பல் உள்ளது. எனவே சிறிய மாற்றமும் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். அப்படித்தான் நடந்துள்ளது.
கப்பலை நகர்த்த என்ன முயற்சி செய்யப்படுகிறது?
பல நாட்களாக, மீட்பு படகுகள் கப்பலின் கனமான பகுதியை மணலில் இருந்து வெளியே தோண்டி இழுக்க முயற்சி செய்கின்றன. சில மூவ்மென்ட் உள்ளது. ஆனால் இது நீண்ட நாட்கள் தேவைப்படும் நடவடிக்கையாகும். எனவே நெதர்லாந்து போன்ற நாடுகளைச் நிபுணர் குழுக்கள் உதவி செய்ய விரைந்துள்ளன.
கப்பலின் எடையை குறைப்பது முதல் பணியாக இருக்கும். அதன் எரிபொருளை குறைக்க வேண்டும், அல்லது அதன் சரக்குகளை அகற்ற வேண்டி வரும். இது இன்னும் அதிக நேரம் எடுக்கும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது. போஸ்காலிஸின் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் பெர்டோவ்ஸ்கி இந்த கப்பலை ஒரு திமிங்கலத்துடன் ஒப்பிடுகிறார். கப்பல் முழுமையாக அகற்றப்படுவதற்கு சில வாரங்கள் ஆகலாம் என்று அவர் கூறுகிறார்.
இந்த சம்பவம் சர்வதேச வர்த்தகத்தை எவ்வாறு பாதிக்கிறது?
சூயஸ் கால்வாயில் இன்னும் பல நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே நிதி சார்ந்த விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தகத்தில் இடையூறுகள் ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் தகவல்படி, 237 கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க காத்திருக்கின்றன. நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். கச்சா எண்ணை வணிகம் பாதிக்கும். லாயிட்ஸ் லிஸ்ட் என்ற கப்பல் துறை சார்ந்த பத்திரிகை, சூயஸ் கால்வாய் மூடப்பட்டால், ஒவ்வொரு நாளும் சுமார் 9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் வணிகம் பாதிக்கப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாயில் இதற்கு முன்பு இப்படி நடந்ததா?
மிக சமீபத்தில், 2017 ஆம் ஆண்டில், கொள்கலன்களை ஏற்றிச் சென்ற ஜப்பானிய கப்பல் இயந்திர கோளாறு காரணமாக சூயஸ் கால்வாயில் நின்று போனது. இருப்பினும், மீட்பு படகுகள் மற்றும் எகிப்திய அதிகாரிகள் விரைந்து சென்று இயந்திர கோளாறை சரி செய்தனர். எனவே இரண்டு மணி நேரத்திற்குள் கப்பல் போக்குவரத்து துவங்கியது.
Post a Comment
0 Comments