மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
மம்தா பானர்ஜி மீது சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று நந்திராமில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, நான்கைந்து பேர் கொண்ட கும்பல் அவரை பிடித்து கீழே தள்ளியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
ரெயபரா பகுதியில் உள்ள கோயிலுக்கு வெளியே பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அருகே போலீசார் யாரும் இல்லாத சமயத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.
இது முழுக்க முழுக்க ஒரு சதிச் செயல் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மம்தா பானர்ஜிக்கு Z-plus பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு மம்தா பானர்ஜி அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்து வருகிறது.
இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மேற்கு வங்க போலீஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment
0 Comments