தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கவுள்ளன. இதற்கான ஆயத்தங்கள் முழு முனைப்புடன் நடந்து வருகின்றன. இதற்கிடையில் வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள்ளை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழக முதலமைச்சருக்கு ரூ .2.01 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. இதில் அவரது பெயரில் 47.64 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 5.5 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களைக் கொண்டுள்ளார்.
பிரமாணப் பத்திரத்தின்படி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் (Kamal Haasan) அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ .45.09 கோடியாகவும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ .131.84 கோடியாகவும் உள்ளது. இதில் லண்டனில் ரூ .2.5 கோடி மதிப்புள்ள ஒரு வீடும் அடங்கும்.
கமல்ஹாசன் தனக்கு ரூ .49.5 கோடி கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். கமல்ஹாசனிடம் மொத்தம் ரூ. 3.07 கோடி மதிப்புள்ள இரண்டு கார்களும் உள்ளன.பழனிசாமி (K Palaniswami), தான் அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனது மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ .47. 64 லட்சமாக உள்ளதாகவும், அவரது மனைவியின் பெயரில் ரூ. 1.04 கோடி சொத்து உள்ளதாகவும், அவரை சார்ந்திருப்பவர்களின் பெயரில் ரூ .50.21 லட்சம் மதிப்பிலான சொத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் தனது பெயரில் அசையாத சொத்துக்கள் பற்றி எந்த தகவலையும் அளிக்கவில்லை என்றாலும், அவரது மனைவி ரூ .1.78 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், அவரை சார்ந்திருப்பவர்கள் சொத்துக்கள் ரூ .2.90 கோடி அசையா சொத்துக்களையும் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ .4.68 கோடியாகும்.
இருப்பினும், 2016 தேர்தலில் பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திர விவரங்களின்படி, அவரது அசையும் சொத்தின் மொத்த மதிப்பு ரூ .3.14 கோடி மற்றும் அசையா சொத்தின் மொத்த மதிப்பு ரூ .4.66 கோடியாகும்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ரூ .5.25 கோடி சொத்துக்களை வைத்திருக்கிறார் என தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இவரது அசையும் சொத்துக்கள் 2016 அறிக்கையின் படி, ரூ .1.1 கோடியாக பட்டியலிடப்பட்டிருந்தது. அசையாச் சொத்துக்களைப் பொறுத்தவரை, அவரது சொத்துக்கள் 2016 ல் ரூ .4.72 கோடியிலிருந்து 2021 ஆம் ஆண்டில் ரூ .3.63 கோடியாகக் குறைந்துவிட்டன. கோவிலபட்டி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த அமமுக தலைவர் டி.டி.வி தினகரன், தன்னிடம் 9.25 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளதாக அறிக்கை தாக்க செய்துள்ளார். எனினும், FERA வழக்கில், அவருக்கு 28 கோடி ரூபாய் மதிப்பிலான தொகை நிலுவையில் உள்ளது.
Post a Comment
0 Comments