கனடா அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (National Languages Equality Advancement Project (NLEAP)) முன்னேற்றம் தொடர்பில்  கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிற் மக் கினொன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இன்று(26) வெள்ளிக்கிழமை நேரில் சென்று கலந்துரையாடினார்.

இன்று மாலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த  கனேடியத் தூதுவர் டேவிற் மக் கினொன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், பதிவாளர் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கை துறையைச் சேர்ந்த விரிவுரையாளர்களுடன்  கலந்துரையாடலை மேற்கொண்டார்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலை, திட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் ஆரயப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் முடிவில், கனேடியத் தூதுவருக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டது.