Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

பெண்தலைமைத்துவ குடும்பங்களை, பணம் தருவதாக கூறி நூதனமான முறையில் குறிவைக்கும் மர்மக் கும்பல்!

வவுனியாவில் பணம் தருவதாக கூறி நூதனமான முறையில் பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கையில்,

மேலும் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொள்ளும் மர்ம நபர்கள் அவர்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி அவர்களது குடும்ப சூழல் தொடர்பாக விசாரித்து அனுதாபம் தெரிவிக்கின்றனர்.

இதன் பின்னர் அவர்களிற்கு பண உதவி செய்வதாக தெரிவித்து நம்பவைப்பதுடன் பணத்தினை உங்களுக்கு வழங்க வேண்டுமானால் சிறுதொகை பணத்தினை காஸ்மூலம் தமது தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

பணத்தினை அனுப்பிய சற்றுநேரத்தில் உங்களது பணம் வங்கி கணக்கில் வைப்பிடப்படும் என்று நம்ப வைத்துள்ளனர்.

மேலும் இதனை நம்பி பலர் 3000 தொடக்கம் 5000 ரூபாய் வரையிலான பணத்தினை ez காஸ் மூலம் அவர்களிற்கு அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த நபர்களின் தொலைபேசி இலக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை பின்னரே உணர்ந்துள்ளனர்.

அத்தோடு குறித்த சம்பவங்கள் வவுனியாவின் கிராம புறங்களில் அதிகமாக பதிவாகிவருகின்ற நிலையில் பொதுமக்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big