சமீபத்தில் மூன்று புதிய தமிழ்ப் பாடல்கள் வெளிவந்தன. பிப்ரவரி 14-ல் அனிருத் இசையமைப்பில் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் பாடல் யூடியூபிலும் இதர இசைத்தளங்களிலும் வெளியானது.
பிப்ரவரி 17-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் வேற லெவல் சகோ பாடல் வெளியானது. பிப்ரவரி 18-ல் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கண்டா வரச் சொல்லுங்க பாடல் வெளியானது.
இந்த மூன்று பாடல்களில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் வேற லெவல் சகோ ஆகிய இரு பாடல்களும் நவீன இசை என்கிற வகையைச் சார்ந்தவை. இளைஞர்களுக்கு இதுபோன்ற பாடல் தான் பிடிக்கும் என்கிற நம்பிக்கையில் இவ்வகைப் பாடல்களே தமிழ் சினிமாவில் அதிகமாக வெளிவருகின்றன.
எனினும் இவ்விரு பாடல்களை விடவும் இவற்றுக்குப் பின்னால் வெளிவந்தகண்டா வரச் சொல்லுங்க என்கிற பறை இசையை மையமாகக் கொண்ட கிராமியப் பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதற்கு ஆதாரமாக மற்ற இரு பாடல்களை விடவும் கண்டா வரச் சொல்லுங்க பாடலுக்கு யூடியூப் தளத்தில் அதிக பார்வைகள் கிடைத்துள்ளன.
தமிழ் ரசிகர்கள் மேற்கத்திய இசை பாணியிலான பாடல்கள் மட்டும் விரும்புவதில்லை, கிராமியப் பாடலுக்கும் அமோக வரவேற்பு அளிப்பார்கள் என்பதை கண்டா வரச் சொல்லுங்க பாடல் மீண்டும் நிரூபித்துள்ளது.
வேற லெவல் சகோ, காத்து வாக்குல ரெண்டு பாடல்களை விடவும் கண்டா வரச் சொல்லுங்க பாடல் யூடியூப் தளத்தில் அதிக பார்வைகளைப் பெற்றிருப்பது பாடலின் தரத்தையும் அதற்கு ரசிகர்கள் அளித்துள்ள அமோக வரவேற்பையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் பாடல் கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்ததோடு சந்தோஷ் நாராயணன் திரையிசை வாழ்விலும் ஒரு திருப்புமுனைப் பாடலாகவும் அமைந்துள்ளது.
யூடியூப் பார்வைகள் (பிப்ரவரி 25 : மதியம் 1 மணி வரை) காத்து வாக்குல ரெண்டு காதல் பாடல் - 8.39 மில்லியன் வேற லெவல் சகோ - 2.90 மில்லியன் கண்டா வரச் சொல்லுங்க - 8.65 மில்லியன்
Last updated: Oct-2024
(பொறுப்புத் துறப்பு: இங்கே பிரசுரிக்கும் செய்திகள்,கட்டுரைகள், காணொளிகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. செய்திகள், தகவல் குறிப்புகள் மற்றும் கட்டுரைகள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. செய்திகளின் உண்மை தன்மையும் தாங்களே கண்டறிந்துகொள்ளுங்கள். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
இவ் இணைய பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் நீக்க பட வேண்டுமாயின் எமது மின்னஞ்சல் (info@sooriyantv.ca) முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
Social Plugin
Social Plugin