கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேரணி ஆரம்பம்(07.02.2021)...
அவர் தெரிவித்துள்ளதாவது:
பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான இந்த நடைபயண போராட்டம் காலை 8 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று இறுதியிலே பொலிகண்டியிலே முடிவிற்கு வரும்.
அங்கு மாபெரும் எழுச்சி கூட்டம் இடம்பெறும்
எம்மை பொறுத்தவரையில் 2009க்கு பிற்பாடு தமிழ் அரசியல் ஒரு பிழையான திசையில் சென்றுகொண்டிருந்த ஒரு நிலையிலேஇன்று அந்த பிழையான அரசியலை சரியான திசையிலே கொண்டுவருவவதற்கான அத்திராவம் இடப்பட்டு;ள்ளது.
விசேசமாக கடந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் வந்திருக்ககூடிய மாற்றங்கள், கடந்த பத்து வருடங்களாக பிழையான திசைக்கு இந்த அரசியலை கொண்டுசென்ற தரப்புகள் கூட தவிர்க்க முடியாமல் இன்று சரியான பாதைக்கு – தமிழ்தேசத்தை அங்கீகரிக்கின்ற,ஒரு இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை கோருகின்ற,ஒரு பாதைக்கு வந்திருக்கின்றது,இந்த நிலைமை மேலும்பலப்பட எங்கள் மக்களினது ஆதரவும் எழுச்சியும் அத்தியாவசியம்.
கடந்த பத்துவருடங்களாக மக்களை திiமாற்றிக்கொண்டுபோய் நடுத்தெருவில் விட்ட பாதைக்கு எதிர்காலத்தில் வேறு எவரும்கொண்டு செல்ல முடியாத அளவிற்கு- திசைமாற முடியாத அளவிற்கு சாவல்விடுகின்ற வகையிலேயே மக்கள் அணிதிரண்டு,தெளிவான செய்தியை அனைத்து தரப்புகளுக்கும் வழங்கவேண்டும்.
போர்முடிவடைந்த பின்னர் எழுக தமிழ் நிகழ்வு மிக வெற்றிகரமாக நடைபெற்றது,ஆனால் வடகிழக்கு அனைத்தையும் இணைத்து தமிழ்பேசும் மக்கள் என்ற எங்கள் முஸ்லீம் மக்கள் முழுமையாக ஆதரிக்ககூடிய இந்த போராட்டத்தை அங்கீகரிக்ககூடிய வகையிலே யாழ் குடாநாட்டிலே இருக்கின்ற மக்கள் மாத்திரமல்ல வடக்குகிழக்கில் இருக்கின்ற அனைத்து மக்களும் கரங்களை பலப்படுத்தவேண்டும்.
Social Plugin
Social Plugin