செவ்வாயில் பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது.


செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்ய பெர்சிவரன்ஸ் என்ற ஆய்வூர்தியை, அட்லஸ் என்ற ஏவூர்தி மூலம் கடந்த 7 மாதங்களுக்கு முன் நாசா அனுப்பி வைத்தது. சுமார் 300 மில்லியன் மைல்கள் பயணித்த அந்த ஆய்வூர்தி பிப்ரவரி 18ல் தரையிறங்கும் எனவும் நாசா அறிவித்திருந்தது.இந்நிலையில் நாசாவின் ஜெட் ப்ரொப்பல்ஷன் ஆய்வகத் தலைமையகத்தில் இருந்து பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியை அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி சுவாதி மோகன் தலைமையிலான விஞ்ஞானிகள் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

உள்ளுர் நேரப்படி நேற்று மாலை 3.55 மணியளவில் பெர்சிவரன்ஸ், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனை நாசா விஞ்ஞானிகள் ஆரவாரமாகக் கொண்டாடினர்.