Bharat Biotech நிறுவனம் தயாரிக்கும் Covaxin தடுப்பூசியின் செயல்திறன் குறித்த இறுதிக்கட்ட முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
ஆனால், அதனைப் பொதுமக்களுக்குப் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும், பலரும் அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கொண்டு அதைப் போட முன்வருவதில்லை.
எனவே, ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
கடந்த மாதம் 16ஆம் தேதியிலிருந்து சுமார் 10.5 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களில் 1.2 மில்லியன் பேர் மட்டுமே Covaxin தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
மத்திய அரசாங்கம் இதுவரை 10 மில்லியன் முறை போடத் தேவையான Covaxin தடுப்பூசிகளைப் பெற உடன்பாடு செய்துள்ளது.
இதுவரை அதில், 5.5 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒப்புநோக்க, 21 மில்லியன் முறை போட்டுக்கொள்ளப் போதுமான AstraZeneca நிறுவனத் தடுப்பூசிகளைப் பெற உடன்பாடு செய்துகொள்ளப்பட்டிருக்கிறது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் AstraZeneca மருந்தாக்க நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசிகளை, இந்தியாவிலுள்ள
Serum Institute தயாரித்து வருகிறது.
அது தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் அளவுக்கு,
Bharat Biotech நிறுவனத்தால் Covaxin தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் நோய்ப்பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
Social Plugin
Social Plugin