லாஸ் ஏஞ்சல்ஸ், பிப் 24 – அமெரிக்காவின் பிரபல கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் (Tiger Woods) ஓட்டிச் சென்ற கார் விபத்திற்குள்ளானது. 


அவரது கார் புல்வெளிப் பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில் தனியாக பயணம் செய்த அவர் கடுமையாக காயம் அடைந்தார். விபத்து நிகழ்ந்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு வீர்ர்களும் மருத்துவ அதிகாரிகளும் அவரை மீட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 

காலில் ஏற்பட்ட காயத்தினால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.