Type Here to Get Search Results !

ஆர்ப்பாட்டம் செய்தால் ,10 வருடம் கம்பி எண்ணணும்: மியான்மர் மக்களுக்கு ராணுவம் மிரட்டல்!

ராணுவத்துக்கு எதிராக போராடினால் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று போராட்டக் காரர்களுக்கு மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை கண்டித்து மியான்மரில் மக்கள் வீதிகளில் இறங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மியான்மரில் நிலவும் பதற்றம்

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. சில நாட்களுக்கு முன்பு ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து தங்கள் வசம் கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி, அந்த நாட்டின் அதிபர் வின் மைண்ட் உள்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் தடுப்புக்காவலில் வைத்தது.

உலக நாடுகள் எதிப்பு குரல்

உலக நாடுகள் எதிப்பு குரல்

மியான்மர் ராணுவத்தினரின் இந்த செயல் உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மர் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தார். மேலும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

மக்கள் கொதித்தெழுந்தனர்

மக்கள் கொதித்தெழுந்தனர்

மியான்மர் மக்கள் ராணுவத்தின் செயலை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் ஆட்சிதான் வேண்டும், அடக்குமுறை கொண்ட ராணுவ ஆட்சி வேண்டாம் என்று கோரி அவர்கள் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

ராணுவத்தின் அடக்குமுறை

ராணுவத்தின் அடக்குமுறை

குறிப்பாக நேபிடாவ், யாங்கூன் நகரங்களில் போராட்டம் நாளுக்கு வலுவடைந்து வருகிறது. பொதுமக்களின் போராட்டம் ராணுவத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. போராட்டத்தை ஒடுக்கு ராணுவம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போராட்டம் தீவிரமாக நடக்கும் நகரங்களில் ஆயுதம் தாங்கிய ராணுவ வாகனங்கள் வலம் வரத்தொடங்கியுள்ளன. மேலும் போராட்டம் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் இணைய சேவையும் முடக்கப்பட்டது.

20 ஆண்டுகள் சிறைவாசம்

20 ஆண்டுகள் சிறைவாசம்

ஆனாலும் அந்த நாட்டு மக்கள் ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து கொந்தளித்து வருகின்றனர். என்ன நடந்தாலும் போராட்டத்தை விடப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் எங்களை எதிர்த்து போராடினால் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று மியான்மர் ராணுவம் போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big