Type Here to Get Search Results !

5 ஆம் ஆண்டு வெற்றியுடன்..

5 ஆம் ஆண்டு வெற்றியுடன்..
எமது தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி

ssss

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா முடக்கநிலை அறிவுப்பு!

இங்கிலாந்தில் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் இன்றுமுதல் மூடப்படும்.

பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களை வாங்க, அல்லது குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல அனுமதி உண்டு.
இங்கிலாந்தில் அதிகம் தேவைப்படுவோருக்குத் தடுப்பு மருந்து சென்றடைவதற்கு முன்னர், கிருமி கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது.
அத்துடன், மேலும் எளிதில் தொற்றக்கூடிய புதுவகை கொரோனா கிருமியும் பரவி வருகிறது.

அதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் முடக்கநிலையை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வழி அவர் உரையாற்றினார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் திணறி வருவதாக அவர் சொன்னார்.

கிருமிப்பரவல் தொடங்கிய காலத்தில் இருந்ததைக் காட்டிலும், நிலைமை மேலும் கடுமையாக இருப்பதாய் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big