இலங்கை ஆசிரியர் சங்கம் பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இதன்படி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறித்த திட்டத்தை முதலில் மேல்மாகாணத்தில் ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.