சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு இல்லம் இன்று திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் உள்ளது. இதனை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க அனுமதி வழங்கியது. இருப்பினும் வழக்கு முடியும்வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை மாலை இந்த உத்தரவு வெளியான உடனேயே போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு திறப்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Post a Comment
0 Comments