காற்றிலேயே மொபைல் அலைபேசிகளுக்கு மின்னேற்றம் செய்யலாம்: சியோமியின் 'Mi Air Charger'. அறிமுகம்!
Sooriyan TVSunday, January 31, 2021
வயர்லெஸ் டாக் அல்லது வயர்லெஸ் சார்ஜர் ஸ்டாண்ட் எதுவும் இல்லாமல் வயர்லெஸ் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய 'மி ஏர் சார்ஜ்' (Mi Air Charger) என்ற புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. Mi Air Charger என்ற பெயருக்கு ஏற்றார் போல, காற்றில் கரண்ட் அனுப்பி ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வது போன்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் முறை
ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய ஒரு வகையான புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிட சியோமி நிறுவனம் டிவிட்டருக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளது. அதுவும், இந்த தொழில்நுட்பம் நீங்கள் ஸ்மார்ட்போனில் விளையாடும்போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய அனுமதிக்கும் விதத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
Mi ஏர் சார்ஜ்
சார்ஜருக்கும் ஸ்மார்ட்போனுக்கும் இடையில் எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் செயல்படும் காரணத்தினால் இந்த தொழில்நுட்பத்தை நிறுவனம் 'Mi ஏர் சார்ஜ்' என்று பெயரிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் செயல்பட, நீங்கள் உங்கள் போனை எந்தவிதமான நிலைப்பாட்டிலும் வைக்க வேண்டியதில்லை, ஆனால் சார்ஜருக்கு அருகில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
இதுவரை எந்தவொரு நிறுவனமும் இதைச் செய்துகாட்டவில்லை ப்ளூடூத் பயன்படுத்துவது போன்று ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சார்ஜ் செய்யப்பட வேண்டிய உங்கள் போன் இருந்தாக வேண்டும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்ப வகையைப் பற்றி நிறைய நிறுவனங்கள் பேசின, ஆனால் இதுவரை எந்தவொரு நிறுவனமும் அதைச் செய்துகாட்டவில்லை. இப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சியோமி தனது ரிமோட் சார்ஜிங் வகையை அறிமுகம் செய்துள்ளது.
எதிர்கால சார்ஜிங் முறை இனி காற்றில் நடக்கும் 80W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், 120W கம்பி சார்ஜிங் போன்ற பல புதிய தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகம் செய்த சியோமி நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு மிரட்டலான தொழில்நுட்பத்தைப் பார்ப்பது எதிர்கால சார்ஜிங் முறை இனி காற்றில் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்துப் பல விவரங்கள் பகிரப்படவில்லை என்றாலும், சிலவற்றை வெய்போவில் நிறுவனத்தின் நிறுவனர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
எப்படி இது சாத்தியமானது? எப்படி இது செயல்படுகிறது?
இது சார்ஜிங் நிலையத்திலிருந்து ஓரிரு மீட்டர் தூரத்திற்கு 5 வாட் மின்சக்தியை வழங்கத் தொழில்நுட்பம் வல்லது என்று கூறினார்.5-கட்ட குறுக்கீடு ஆண்டெனா மூலம் உங்கள் சாதனத்தின் நிலையைத் தீர்மானித்த பிறகு, ஒரு கட்ட கட்டுப்பாட்டு வரிசையை உருவாக்கும் 144 ஆண்டெனாக்கள் மில்லிமீட்டர்-அலை அதிர்வெண்களில் பீம்ஃபார்மிங் மூலம் சக்தியை அனுப்புகின்றது அவர் கூறியுள்ளார். உண்மையில் இந்த கண்டுபிடிப்பு பாராட்டிற்குரியதே.
நமது சூரியன் தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி🙏 #Sooriyantv #சூரியன்தொலைகாட்சி #சூரியன்டிவி ☀️🎂🎉🎊📺🖥📡 #5thanniversary #5ஆம்ஆண்டில்
Last updated: Oct-2024
(பொறுப்புத் துறப்பு: இங்கே பிரசுரிக்கும் செய்திகள்,கட்டுரைகள், காணொளிகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. செய்திகள், தகவல் குறிப்புகள் மற்றும் கட்டுரைகள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. செய்திகளின் உண்மை தன்மையும் தாங்களே கண்டறிந்துகொள்ளுங்கள். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
இவ் இணைய பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் நீக்க பட வேண்டுமாயின் எமது மின்னஞ்சல் (info@sooriyantv.ca) முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
Social Plugin
Social Plugin