Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

சுமந்திரனின் சூதுக்கு பஞ்சமில்லை! இளையவர்களை கெடுப்பதில் தீவிரம்

யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைய பிரதான காரணமாக அமைந்த உறுப்பினர் அருள்குமரனின் வீட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் பின்னிரவில் சென்றிருந்தார்.பின்னிரவு 11.02 அளவிலேயே அந்த வீட்டிலிருந்து அவர் வெளியேறி சென்றார்.யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் 1 வாக்கினால் தோல்வியடைந்திருந்தார்.


இதில், எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்த உறுப்பினர் அருள்குமரன் வாக்களிக்கவில்லை.ஆர்னோல்ட் போட்டியிட கூடாதென்பதில் சுமந்திரன் ஒற்றைக்காலில் நின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப் ஆனல்ட்டை வேட்பாளராக நிறுத்தியிருந்தது.கூட்டமைப்பின் ஒரு வேட்பாளர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டது, மணிவண்ணன் தரப்பையும் ஈ.பி.டி.பியையும் கோர்த்து விட்டது என, கூட்டமைப்பிற்கு எதிரான பெரும் நடவடிக்கைக்கான திரைக்கதையை சுமந்திரன் என அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

சுமந்திரனிடம் ஒரு சிறந்த பண்பு உள்ளது பிழையைச் செய்து விட்டு அதனை நியாயப்படுத்தி தன்னை நல்லவனாக்க காட்டுவதற்கு வாய் வன்மையால் கதைப்பது, அதன் ஒரு எடுத்துக் காட்டாகவே நேற்றைய தனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதை முன்னர் திட்டமிட்டிருந்தார் சுமந்திரன், நேற்று முன் தினமே கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதம் தயார் செய்யப்பட்டு விட்டது.

நேற்றைய தினம் புதன் கிழமை மாலை தன் மீது பழி வந்து விடும் என்பதை அறிந்த சுமந்திரன் அதனைத் தவர்ப்பதற்காக நேற்று முதல் நாள் செவ்வாய்கிழமை எழுதிய கடிதத்தை கட்சி முக்கியஸ்தர்களிற்கு செல்வதற்கு முன் நேற்று மாலை சுடச்.. சுட.. ஊடகங்களில் வெளியிட்டு தன்னை நல்லவர் எனக் காட்ட முயற்சி செய்து மூக்குடைந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஈ.பி.டி.பிக்கு சார்பான நிலை உருவாக காரணமாக அமைந்த ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமை- கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் அருள்குமரனின், நாவலர் வீதியிலுள்ள வீட்டுக்கு எம்.ஏ.சுமந்திரன் நள்ளிரவில் சென்றுள்ளார்.இந்த நிலையில், யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் ஏற்பட்ட தோல்விக்கு மாவை சேனாதிராசாவே பொறுப்பேற்க வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது.
Tags

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big