இந்த தாக்குதல் இன்று புதன்கிழமை காலை Bollène (Vaucluse) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள உள்ள தனியாருக்குச் சொந்தமான பகுதிக்கு ஒன்றுக்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டு, காலை 9.30 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
இரு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காவல்துறையினரை பார்த்த குறித்த நபர் பலத்த கோபம் கொண்டு அதிகாரிகளை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளார்.
இரண்டு கத்திகளை உருவி எடுத்த குறித்த நபர், அதிகாரிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலின் போது, 'அல்லா ஹூ அக்பர்' என கத்தியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் சில நொடிகளுக்குள் தாக்குதலாளி, மின்சார துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இரு அதிகாரிகளில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மற்றைய அதிகாரி இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
Post a Comment
0 Comments