உலக வர்த்தகத்தில் அமெரிக்கா, சீனா இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், வர்த்தக உலகில் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துவதில் இவ்விரு நாடுகளும் கடுமையாகப் போட்டி போட்டு வருகின்றன.
இத்தகைய நிலையில் ஷாங்காயில் உள்ள சீன அரசின் சேவையகத்தில் இருந்து கசிந்த தகவல்கள் உலக அரங்கில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஷாங்காய் நகரத்தில் உள்ள அரசுத் தரப்பு தரவு சேவையகம் ஒன்றில் இருந்து சீன எதிர்ப்பாளர்களால் களவெடுக்கப்பட்ட இந்த தகவல் திரட்டானது, மற்றொரு சர்வதேச குழுவின் மூலமாகத் தற்போது பன்னாட்டு ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளது.
இத்தகையவர்களின், கட்சிப் பொறுப்பு, தேசிய அடையாள அட்டை எண், சார்ந்த இனம், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ஊடகங்கள், பன்னாட்டு அளவிலான உளவு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் பட்டியலில் ஜாகுவார், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் எச்எஸ்பிசி உள்ளிட்ட நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
பிரிட்டிஷ் வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் எச்.எஸ்.பி.சி. ஆகியவற்றின் 19 கிளைகளில் 600-க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களும், மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவில் 123 கட்சி உறுப்பினர்களும், பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் ஏர்பஸ், போயிங் மற்றும் ரோல்ஸ் ராய்ஸிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கரோனா தடுப்பூசி குறித்த தரவுகளை சீன அரசு கைப்பற்ற முனைவதாக எழுந்த புகாரின் மத்தியில் தற்போது முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றில் கட்சி உறுப்பினர்கள் பணியாற்றி வருவது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், கட்சியின் உறுப்பினர் பட்டியலில் உள்ள எவரும் சீனாவுக்காக உளவு பார்த்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை தற்போது மேற்கொள்ள வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு குற்றம் சாட்டப்பட்ட சீனா தற்போது உலக அளவில் தனது ஊடுருவலை மேற்கொண்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment
0 Comments