கனடாவில் திங்களன்று 15,000 COVID-19 இறப்புகளைத் தாண்டிவிட்டது. கியூபெக்கில் திங்களன்று 37 இறப்புகளைப் பதிவு செய்ததை தொடர்ந்து கனடா 15,000 இறப்புகளை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் ஏழு மரணங்கள் நிகழ்ந்தன.
27 இறப்புகள் டிசம்பர் 21 முதல் டிசம்பர் 26 வரை நிகழ்ந்தன. மேலும் மூன்று குறிப்பிடப்படாத தேதிகளில் இருந்து வந்தவை என்று அந்த மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிசம்பர் 23 முதல் டிசம்பர் 27 வரையிலான விடுமுறை நாட்களில் 112 பேர் இறந்துவிட்டதாக ஆல்பர்ட்டா அறிவித்தது. டிசம்பர் 23 அன்று 30 இறப்புகளும், கிறிஸ்துமஸில் 17 இறப்புகளும் பதிவாகியுள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஆல்பர்ட்டாவில் இப்போது 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
தொற்றுநோய் தொடங்கிய ஒன்பது மாதங்களில் 15,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை எட்டுவது COVID-19 எவ்வளவு தீவிரமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று ஒன்ட், கிங்ஸ்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் டாக்டர் ஜெரால்ட் எவன்ஸ் கூறினார்.
கனடா முன்னதாக அக்டோபர் 27 அன்று 10,000 COVID-19 இறப்புகளைத் தாண்டிது. மே 12 அன்று 5,000 ஐக் கடந்தது.
“அத்தியாவசியமற்ற பயணம் இப்போது மிகவும் ஆபத்தானது” என்று நியூ பிரன்சுவிக்கின் சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெனிபர் ரஸ்ஸல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“சுய-தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படாதபோது, பயண தொடர்பான பாதிப்புகள் மற்றும் வீட்டு உறுப்பினர்களுக்கு கொரோனா பரவுவதை நாங்கள் காண்கிறோம்,” என்று ரஸ்ஸல் கூறினார்.
பொது சுகாதாரத்தின் அறிவுறுத்தலின் படி, 14 நாட்களுக்கு சுய-தனிமைப்படுத்த வேண்டிய நபர்களை அவ்வாறு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் டொராண்டோ பகுதி, ஒட்டாவா மற்றும் பி.சி.யில் உள்ள வான்கூவர் தீவிலும் புதிய மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளன.
15,378(29.12.2020 11:40PM)
Post a Comment
0 Comments