Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

முகக்கவசம், கையுறை போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகாதார சிக்கல் – சுகாதார அமைச்சர்!

முகக்கவசம், கையுறை போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகாதார பிரச்சினை – மஹிந்த அமரவீர

நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள், கையுறைகள் போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகா தார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இவற்றை அகற்றும் பொழுது எந்தவித சுகாதார ஆலோசனைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்தக் கழிவுப் பொருட்களை அகற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் என்பவற்றை அகற்று வதற்கு முன்னர் அவற்றைச் சவர்க்காரம் இட்டு கழுவி உலர்த்த வேண்டும்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில் வைரஸ் சுற்றாடலில் சேரும் அபாயம் ஏற்படுவதுடன் அவை நீருடன் கூட கலந்து மீண்டும் மனித உடம்பில் உட்போகக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அங்குனுகொல பெலஸ்ஸவில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட்- 19 கொரோனா தொற்றாளர்கள் என அடை யாளம் காணப்பட்டவர்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்டவர்களிடமிருந்து அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் மஞ்சள் நிறப் பொதியில் இடப்பட்டு அகற்றப்படுவது அவசியமாகும்.

இவற்றை எந்த வகையிலும் மீள்சுழற்சி செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித் துள்ளார்.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big