இராணுவத்தை பலப்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கும் பல நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமர் தனது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பினை பாதுகாப்பதற்கும் முப்படையினரின் திறமையையும் தொழில்நுட்ப திறனையும் அதிகரிப்பதற்குமான திட்டமொன்றினை பிரதமர் தனது வரவு செலவு திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.

இலங்கை கடற்படையினரை வலுப்படுத்தி நாட்டின் வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக வரவு செலவு திட்டத்தின் ஊடாக ரூ.2500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பிரச்சினைக்கு முடிவைக் காண வேண்டும். சர்வதேச கடத்தல்காரர்கள் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.