அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற காற்பந்து நட்சத்திரம் டியேகோ மரடோனா (Diego Maradona) மூளையில் ஏற்பட்டிருந்த ரத்தக் கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சைக்குப் பிறகு, சிறப்பாகத் தேறி வருவதாக அவருடைய மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மரடோனா நல்ல முறையில் குணமடைந்து வருவது தம்முடைய குழுவினருக்கு வியப்பு அளித்திருப்பதாகவும் அந்த மருத்துவர் பகிர்ந்துகொண்டார்.
நரம்பியல் அறுவை சிகிச்சை என்பதால், கவனமாக இருப்பது அவசியம் என்பதை அவர் சுட்டினார்.
மரடோனாவுக்கு ஊக்கமளிக்க, அவரது ரசிகர்கள் மருத்துவமனைக்கு வெளியில் திரண்டிருந்தனர்.
வழக்கமாகத் தலையில் ஏற்படும் காயத்தால், மூளையில் ரத்தக் கட்டி ஏற்பட்டு, அது மூளையில் அழுத்தத்தை உண்டாக்கும்.
பொதுவாகவே, மரடோனாவின் உடல்நிலை சீராக இல்லாததால், அந்தச் சிகிச்சை அபாயம் மிகுந்ததாகப் பார்க்கப்படுகிறது.