கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதை எதிர்த்து ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கை துறைமுக சேவைகள் பொது ஊழியர் சங்கத்தினால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இப்போது மறந்துவிட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Social Plugin
Social Plugin