விஜய் ஆண்டனி நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு கோடியில் ஒருவன் என தலைப்பிடப்பட்டுள்ளது.
கொலைகாரன் திரைப்படத்திற்கு பிறகு கை நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி இப்பொழுது மெட்ரோ படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் உடன் கை கோர்த்துள்ளார்.தயாரித்தும் இயக்கியும்
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அதேசமயம் அவர் நடிக்கும் சில திரைப்படங்கள் தயாரித்தும், இயக்கியும் வருகிறார்.
இசையமைப்பதை குறைத்துக்கொண்டு
இவ்வாறு பல முகங்களை கொண்டுள்ள விஜய் ஆண்டனி நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான "நான்" திரைப்படம் சற்றும் எதிர்பாராத மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக்கொண்டு நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பிச்சைக்காரன் பாகம்-2
அலட்டிக் கொள்ளாத எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஒவ்வொரு திரைப்படங்களில் மூலமும் கவர்ந்து வரும் விஜய்ஆண்டனி சமீபத்தில் திமிரு புடிச்சவன் மற்றும் கொலைகாரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இப்பொழுது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி மற்றும் பிச்சைக்காரன் பாகம்-2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கோடியில் ஒருவன்
இந்நிலையில் மெட்ரோ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் உடன் முதல் முறையாக இணைந்திருக்கும் விஜய் ஆண்டனி இப்போது அட்டகாசமான திரைப்படத்தில் நடித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் அதன் படப்பிடிப்புகள் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மழைக்கு நடுவிலும் பரபரப்பாக நடைபெற்றது. இதில் மீசைய முறுக்கு புகழ் நடிகை ஆத்மிகா இவருக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு "கோடியில் ஒருவன்" என தலைப்பிடப்பட்டுள்ளது.
இங்கு டியூஷன் எடுக்கப்படும்
தீபாவளியை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட தயாராக இருந்த இந்த படக்குழு இப்பொழுது, கோடியில் ஒருவன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளது. உயரமான கட்டடங்களுக்கு நடுவில் டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு விஜய் ஆண்டனி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்க ஒருபுறம் நேதாஜியின் புகைப்படம் மற்றொருபுறம் மகாத்மா காந்தியின் புகைப்படம் என சுவாரஸ்யமான குறியீடுகளை வைத்து, அதில் ஒரு கட்டிடத்தின் சுவரில் "இங்கு டியூஷன் எடுக்கப்படும்" என எழுதியிருக்கும் வாசகம் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
2021 கோடை விடுமுறையில்
இவ்வாறு பல்வேறு குறியீடுகளைக் கொண்டு வெளியாகி உள்ள "கோடியில் ஒருவன்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரையும் மிரள வைத்து யோசிக்க வைத்துள்ள நிலையில் தரமான சம்பவத்தை செய்ய விஜய் ஆண்டனி காத்துக் கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் 2021 கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
Post a Comment
0 Comments