எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருணை காட்டுகிறது, தமிழக அமைச்சரவை முன்பே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. இதன் பிறகும் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காத தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் பரிந்துரை மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 வழங்கும் சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தானே நேரடியாக வாழ்நாள் சிறையாளிகளையோ, மரண தண்டனை சிறையாளிகளையோ முன் விடுதலை செய்யலாம் என்றாலும், இப்போது அந்த சிறப்பதிகாரத்தை தாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றும், இதுதொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் சட்ட நிலைமைகளையும் எடுத்துக்காட்டி, தமிழ்நாடு அரசு ஆளுநரை வலியுறுத்தலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் ஏழு தமிழர் விடுதலைக்கு தாமதம் செய்வது ஏன் என்று கேட்டு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருணை காட்டுகிறது; தமிழக அமைச்சரவை முன்பே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது; எங்களுக்கு மறுப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகிறது. இதன் பிறகும் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment
0 Comments