அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் வெளியிட்டு இருக்கும் மேப் ஒன்று இணையம் முழுக்க தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணும் பணி நடைப்பெற்று வருகிறது. 50 மாகாணங்களில் பதிவான 160 மில்லியன் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதுவரை வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி.. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 223 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 166 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
தேர்தல் முடிவு
தேர்தல் முடிவுகள் டிரம்பிற்கு எதிராக சென்று கொ
ண்டு இருக்கும் நிலையில் நேற்று தேர்தல் நேரத்தில் அதிபர் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் வெளியிட்ட புகைபடம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது. தேர்தல் முடிவுகளை கணிக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மேப் ஒன்றை வெளியிட்டு இருந்தார். உலகம் முழுக்க எந்தெந்த நாட்டு மக்கள் டிரம்பிற்கு ஆதரவு தருகிறார்கள் என்று அந்த மேப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆதரவு
டிரம்பிற்கு ஆதரவு தரும் நாடுகளை டொனால்ட் டிரம்ப் ஜூனியர் சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டு இருந்தார். குடியரசு கட்சியின் நிறம் சிவப்பு என்பதால் டிரம்ப்பை குறிக்க டொனால்ட் டிரம்ப் ஜூனியர் சிவப்பு நிறத்தை பயன்படுத்தி இருந்தார். டிரம்பிற்கு எதிராக இருக்கும் நாடுகளை ஜனநாயக கட்சியின் நிறமான நீல நிறத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
சர்ச்சை
இவர் வெளியிட்டு இருந்த மேப்பில் இந்தியாவை சேர்ந்த காஷ்மீர் பகுதிகளை தனி நாடாக காட்டி இருந்தார். இந்தியாவுடன் காஷ்மீரை சேர்க்காமல், பாகிஸ்தானுடனும் காஷ்மீரை சேர்க்காமல் தனி நாடாக காஷ்மீரை அவர் குறிப்பிட்டு இருந்தார். அதோடு டிரம்பிற்கு ஆதரவாக காஷ்மீர் இருப்பதாகவும், டிரம்பிற்கு எதிராக இந்தியா இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் அந்த மேப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மோசம்
காஷ்மீரை இப்படி தனி நாடாக டொனால்ட் டிரம்ப் ஜூனியர் அடையாளபடுத்தி இருப்பது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதேபோல் சீனாவை போல இந்தியாவும் டிரம்பை எதிர்க்கிறது என்று டொனால்ட் டிரம்ப் ஜூனியர் குறிப்பிட்டு இருப்பதும் சர்ச்சையாகி உள்ளது. சில நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவின் பணத்தில் இதேபோல் காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியாவில் காட்டாமல் தனியாக காட்டியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments