சதொச நிறுவனத்திடமிருந்து பொருட்களை விநியோகிப்பதற்கு வசதி!
Sooriyan TVMonday, November 02, 2020
நாடளாவிய ரீதியில் சதொச நிறுவனத்தின் இணையத்தளத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பொருட்களை சலுகை விலையில் வீடுகளுக்கே விநியோகிப்பதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தற்சமயம் நிலவும் நிலையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பிக்மி நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதியை சதொச நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.