தனிமைப்படுத்திக் கொண்ட துணைப்பிரதமர்... துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
கொவிட்-19 தடமறிதல் பயன்பாட்டிலிருந்து அறிவிப்பைப் பெற்ற பிறகு ஃப்ரீலேண்ட் இந்த முடிவினை எடுத்துள்ளார். சோதனையின் முடிவுகளுக்காக நான் காத்திருக்கும்போது நான் வீட்டில் தனிமைப்படுத்துகிறேன் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.எனது முடிவுகள் எதிர்மறையாக வந்தன. மீண்டும், எங்கள் மகத்தான சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு எனது நன்றி. உங்களிடம் ஏற்கனவே கொவிட்-19 தடமறிதல் இல்லையென்றால், அதை இன்று பதிவிறக்கம் செய்து இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவுங்கள் என்று அவர் மேலும் டுவிட்டரில் மேலும் தெரிவித்தார்.
கொவிட்-19 தடமறிதல் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய கனடியர்களை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த வைரஸ் பரவுவதை நிறுத்த உதவுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Post a Comment
0 Comments