துருக்கியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஆறு வயது சிறுமியொருவர் சுமார் 65 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 14 வயதான மற்றொரு சிறுமியொருவர் இடிபாடுகளில் சிக்கி 58 மணிநேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.