ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவம் இன்று என்கவுண்டர் செய்தது. அத்துடன் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியையும் முறியடித்தது. 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவம் இன்று என்கவுண்டர் செய்தது. அத்துடன் தீவிராவதிகளின் ஊடுருவல் முயற்சியையும் முறியடித்தது..

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டார் பகுதியில் ரோந்து சென்ற ராணுவத்தினர் மீது இன்று திடீரென மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர்.

இதில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தி உள்ளார்.

2 Army, 1 BSF soldiers martyred in Jammu and Kashmirs Kupwara