இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் போதியவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் அச்சம் கொள்ள தேவையில்லை என கனிய எண்ணெய் மொத்த கஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.
                                             
நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் தேவையான எரிபொருளை கொண்டு செல்வதற்கான வசதிகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும்: 
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜசிங்கம் 
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமை போல திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பொலிஸ் பிரிவில் குறைந்தபட்சம் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களையாவது திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜசிங்க குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் , கொழும்பு நகரில் அதிகமான எரிபொருள் நிலையங்களை திறப்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் என சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

எவ்வித இடையூறும் இன்றி வழமை போல எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.