சரத் பொன்சேகா, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீதான அமெரிக்க பயணத்தடை, அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக, சிறிலங்காவுக்கு ஒருநாள் பயணத்தை மேற்கொண்டு வருகை தந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, மாலைதீவுகளுக்குச் செல்வதற்காக, இன்று பிற்பகசிறிலங்காவில் இருந்து வெளியேறினார்.
இவர், இன்று (28) காலை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்ட அவர், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்குச் சென்றார்.
சிறிலங்கா ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சிறிலங்காவின் இரண்டு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை, நீதித்துறை செயல்முறையாகும் என்றும் இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு, சில நேரம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனநாயக, அமைதியான, வளமான, முழு இறையாண்மை கொண்ட சிறிலங்காவுடன், தங்களது கூட்டாட்சியை வலுப்படுத்த, அமெரிக்க முயல்வதாகவும் அவர் கூறினார்.
Post a Comment
0 Comments