நவராத்திர் பண்டிகையின் ஒன்பது திருநாட்களின் இறுதி நாளில் ஆயுத பூஜையும், பத்தாவது நாளில் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை தினத்தன்று, வாழ்க்கைக்கு உதவும் உபகரணங்களுக்கும் சந்தனம் குங்குமம் இட்டு மக்கள் வழிபடுவது வழக்கம். விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
நாளை(25) காலை 7:45 – 8: 45 நல்ல நேரமாக அமைந்துள்ளது. அதே போன்று, மாலை 3.15 முதல் 4.15 மணி வரை நல்ல நேரமாகவும் அமைந்துள்ளது.
மேலும், நாளை பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை எமகண்டம். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இராகு காலம். இந்த நேரங்களில் வழிபாடு செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தாங்கள் பயன்படுத்தும், தங்கள் வாழ்கையை அர்த்தமாக்கும் ஆயுதங்களை இறைவன் காலடியில் வைத்து இன்றைய நாளில் பூஜிப்பது வழக்கம். உங்கள் புத்தகம், பேனா, வண்டிச்சாவி, எல்லாம் இன்றையக் காலக் கட்டங்களில் நம்மை வழி நடத்தும் ஆயுதங்கள் தான்.
அவல், பொரி, சுண்டல் போன்றவைகள் இந்நாளில் அனைவரும் பயன்படுத்துவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உற்றார் உறவினர்களோடு தங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் பெருவாரியான மக்கள் வெளிப்படுத்துவார்கள்.
Post a Comment
0 Comments