கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, 2021ஆம் ஆண்டு வரை உட்புற பொது இடங்களில் கட்டாய முகக்கவச சட்டங்களை வலுப்படுத்த ஒட்டாவா நகர சபை வாக்களித்தது.
ஒட்டாவாவில் உள்ள அனைவரும் கடைகளில், பொதுப் போக்குவரத்து மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் காண்டோ கட்டடங்களின் பொதுவான பகுதிகளில் பொருள் வாங்கும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று துணைவிதி வலியுறுத்துகிறது.
உட்புற பொது இடத்தில் முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கு, 240 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும். இருப்பினும், வணிக உரிமையாளர்களுக்கும், காண்டோ நில உரிமையாளர்களுக்கும் சரியான அடையாளங்களுடன் முகக்கவசங்களை அமல்படுத்தாததற்கும், முன் நுழைவாயில்களில் கை கைச்சுத்திகரிப்பான்களை வழங்காததற்கும் 490 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
குழந்தைகள் மற்றும் சுவாசச் சிரம மருத்துவ நிலையில் உள்ளவர்களுக்கு சில விதிவிலக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.





No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.