பிரான்ஸ் நாட்டில் அரங்கேறி வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் அரேபிய நாடுகள் கொதிப்படைந்து உள்ளன.
பிரான்ஸில் உள்ள பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையிலான பதாகைகள் தொங்கவிடப்பட்டு உள்ளன.
பிரான்சின் இந்த இஸ்லாமிய விரோத போக்கிற்கு அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அரபு நாடுகள் பிரான்ஸ் நாட்டின் உற்பத்திப் பொருட்களை சந்தையிலிருந்து நீக்க ஆரம்பித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கத்தாரில் உள்ள Family Food centre, Family Mart, New Indian Supermarket, Retailmart Hypermarket, Qatar Shopping Complex போன்ற சூப்பர் மார்கட்டுகள் பிரான்ஸ் உற்பத்திப் பொருட்களை சந்தையிலிருந்து நீக்க ஆரம்பித்துள்ளது.
மேலும், கத்தார் சந்தையில் உள்ள பொருட்களை டெலிவரி செய்யும் Snoonu மற்றும் QTamween போன்ற செயலிகளும் பிரான்ஸ் பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ளது.
முன்னதாக கத்தாரில் உள்ள பிரபல அல் மீரா நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் தனது அனைத்து கிளைகளிலிருந்தும் பிரெஞ்சு தயாரிப்புகளை (French products) மறு அறிவிப்பு வரும் வரை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments