பீகாரில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்வதால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பீகார் கருத்து கணிப்பு
பீகாரில் ஜேடியூ- பாஜக ஒரு அணியாகவும் காங்கிரஸ்- ஆர்ஜேடி- இடதுசாரிகள் மெகா கூட்டணியாகவும் களத்தில் நிற்கின்றன. சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகளில் ஜேடியூ-பாஜக ஆட்சி தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தேஜஸ்வி யாதவ் அலை?
இருப்பினும் ஆர்ஜேடியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் செல்லும் இடம் எல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. இது தேர்தல் போக்கை திசைமாற்றவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில் பீகாரில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.
இன்று ராகுல் காந்தி பிரசார
பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் 2 பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி இன்று பங்கேற்கிறார். ஹிஸூவா என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவும் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பிரசாரம்
ரோக்தாஸ் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தேக்ரி, பகல்பூரில் நடைபெறும் பிரதமர் மோடியின் பிரசார கூட்டங்களில் ஜேடியூ-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ்குமார் பங்கேற்கிறார். கயாவில் நாளையும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார். அகில இந்திய தலைவர்களின் பிரசாரங்களால் பீகார் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
Post a Comment
0 Comments