Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      யாழ்/நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவில், 300 பக்தர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்!

      வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவில், 300 பக்தர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என்று யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார். 

      அத்துடன், அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
      யாழ். மாநகர சபையில் இன்று செவ்வாய்கிழமை நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிந்துரைக்கு அமைய மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
      து.ஈசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நல்லூர் திருவிழாவில் 500இற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் சுகாதாரத் துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோகபூர்வமாக எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை. இதனால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும். அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவையும் இம்முறை தடைசெய்யப்படுகிறது” என்றுள்ளார்.

      ஆலய கொடியேற்ற திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று ஆலய தர்மகர்த்தா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
      YouTube தள முகவரி –https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured


      கானொளி:Nalluran com
      Tags

      Post a Comment

      0 Comments

      Click To Here On Every Day For Development

      Phots Shot

      8/Photography/grid-big