Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

முடி கொட்டுவதை தடுக்க வெங்காய சாறு உண்மையில் உதவுமா?.. ஒரு பார்வை

முடி கொட்டுதல் பிரச்சனையை சரி செய்து ..மீண்டும் முடி வளர வெங்காயச் சாறு உண்மையாக உதவும்.. இதை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்
பலன் தரும் இதை பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவேஈம்..
முடிக்கு என்ன ஊட்டச்சத்து வேண்டும் ..வெங்காயத்தில் என்ன சத்து உள்ளது .. அது எவ்வாறு முடிக்கு பயன்படுகிறது..எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.,
முடிவளர்ச்சியை தூண்டும் சத்துக்கள்
  • பயோட்டின்
  • புரதம்
  • ஒமேகா-3
  • இரும்புச்சத்து
  • வைட்டமின் C, E, A & B..
வெங்காயத்திலுள்ள ஊட்டச்சத்துக்கள்
  • 3.5 அவுன்ஸ் (100 கிராம்) மூல வெங்காயத்தில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள்
  • கலோரிகள்: 40
  • நீர்: 89%
  • புரதம்: 1.1 கிராம்
  • கார்ப்ஸ்: 9.3 கிராம்
  • சர்க்கரை: 4.2 கிராம்
  • நார்: 1.7 கிராம்
  • கொழுப்பு: 0.1 கிராம்
  • வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.
  • வெங்காயத்தில் வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் பி 6 மற்றும் பொட்டாசியம்,கந்தகம் உள்ளன,
  • வெங்காயத்தில் தாவர கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன,
கந்தகமும் வெங்காயமும் :
  • முடிக்கு வெங்காய சாறு மிகவும் அவசியமான கூறுகளில் ஒன்று கந்தகம். .. வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது,
  • கந்தகம் உடலில் மிகவும் பொதுவான தாதுக்களில் ஒன்றாகும். நொதிகள் மற்றும் புரதங்களின் போதுமான உற்பத்திக்கு இது தேவைப்படுகிறது. கூந்தலின் கூறுகளில் ஒன்றான கெராட்டினிலும் சல்பர் காணப்படுகிறது.
  • மெத்தில்சல்போனைல்மெத்தேன் கந்தகத்தின் அதிக உறிஞ்சக்கூடிய மூலமாகும், இது வெங்காயத்தில் குறிப்பாக அதன் வெளிப்புற அடுக்குகளில் ஏராளமாகக் காணப்படுகிறது. இது தலைமுடிக்கு கெரட்டின் உருவாக உதவுகிறது, இதன் விளைவாக முடி வளரும்.
  • வெங்காய சாற்றில் கேடலாஸ் (catalase) எனும் ஆக்ஸினேற்ற நொதி உள்ளது ..இது நரை முடி ஏற்பட காரணமான ஹைட்ராஜன் பெராக்சைடு உற்பத்தியை சிதைக்கிறது .
  • தோல்,நகம் மற்றும் முடிகளுக்கு கந்தகம் தேவை .
  • ஆகவே அவை சைஸ்டைன்(cysteine)மற்றும் மெத்தியோனைன் (Methionine)போன்ற கந்தகம் அடங்கிய அமினோ அமிலங்கள் மூலமாக புரத உணவுப் பொருட்களிலிருந்து கந்தகத்தை உடல் பெறுகிறது.
  • வெட்டும் போது …வெங்காயம் ஒரு நொதி எதிர்வினை மூலம் கந்தக சேர்மங்களை உருவாக்குகிறது.
  • பி வைட்டமின்களில் (தையமின், பண்டோதினிக் மற்றும் பயோட்டின்) கந்தகம் உள்ளடங்கி இருக்கிறது.
வெங்காயத்தினால் முடிக்கு ஏற்படும் நன்மைகள்:
  • ஒரு கந்தகம் நிறைந்த புரதமான கெராடின் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து .
  • கந்தகத்தின் நன்மையால் செறிவூட்டப்பட்ட வெங்காயம் அனைத்து வகையான முடி பிரச்சினைகளிலும் தீர்வாக அமைகிறது
  • அதிகப்படியான கந்தகம் வெங்காயத்திலுள்ளது இது பெரும்பாலும் புரதங்களில் உள்ள செயலில் உள்ள அமினோ அமிலத்தில் காணப்படுகிறது.
  • இது தலைமுடியில் கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் தலைமுடி நல்ல நிறத்தை பெற்று இளமையான தோற்றமும் கிடைகின்றது
  • வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால் முடியின் வேர்க்கால்களுக்கு எந்த ஒரு தொற்றும் வராமல் இருக்கும்.
  • இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • வெங்காயச்சாறு பயன்படுத்த மிகவும் எளிமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்
  • இது உச்சந்தலையில் மற்றும் குறிப்பாக வேர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் கூந்தலின் ஆரோக்கியமான உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
  • இதில் ஆக்ஸிஜனேற்றிகள் (catalase) இருப்பதால் முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கின்றன.
  • இது பொடுகையும் குறைக்க வல்லது.
  • முடி பிளவு வராமல் தடுக்கிறது .
ஒரு சில ஆய்வுகளின்படி, வெங்காய சாற்றைப் பயன்படுத்துவதால் முடி மீண்டும் வளர்வதை மேம்படுத்த முடியும் என்றும் இது கந்தகத்தில் கெரட்டின் இருப்பதால் இது நிகழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பயன்படுத்தும் முறை
  • வெங்காயச்சாற்றை ஓரு பஞ்சால் நனைத்து தலையின் மயிர்க்கால்களில் படுமாறு தேய்த்து 20 நிமிடத்தில் குளிக்கவும்..
  • ஆலிவ் எண்ணெய் / தேங்காய் எண்ணெய் / விளக்கெண்ணெய்/ நல்லெண்ணெய்.. இதில் ஏதாவது ஒன்றுடன் கலந்தும் தேய்க்கலாம்.
  • முட்டை வெள்ளைகரு , கற்றாழை இவற்றுடன் கலந்தும் தேய்க்கலாம்
  • சிறிய வெங்காயத்தின் மேல்ப்பகுதியில் சிறியதாக துளையிட்டு .. அதில் வெளியேறும் சாற்றுடன் எண்ணெய்யில் நனைத்து அப்படியே தலையில் மசாஜ் செய்யலாம்.
  • இதை தவிர …ஆன்லைனிலும் ஆனியன் ஹேர் மாஸ்க் என்று உள்ளது அதையும் பயன்படுத்தலாம் முடி பளப்பளப்பும் கிடைக்கும்.
இது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் வாங்கி பயன்படுத்தியது ..
பயன்படுத்தும் முன் கவனத்திற்கு :
  • முதலாவது 5 லிருந்து 10 நிமிடம் வைத்து பரிசோதனை செய்து பார்த்து விட்டு .. தலைவலி ஏற்படாமல் அல்லது எந்த பாதிப்பும் இல்லையென்றால் வாரம் 1 அல்லது 2 முறை தடவலாம்
  • நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது .ஆகவே சைனஸ் உள்ளவர்களுக்கு தலைவலி ஏற்படும் ..தலை சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது
  • பயன்படுத்தும்போது இதன் நெடி சிலருக்கு பிடிக்காது .. ஆகவே இதனுடன் நறுமண எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவது நல்லது ..
ஆரோக்கிய முடி வளர்ச்சியை கண்டு ..ஆரோக்கியமான வாழ்வை பெறுவோம்…
நன்றி்…

முக்கிய குறிப்பு:
உங்களுக்கு ஏதும் அலர்ஜி இருந்தால் நன்கு தெரிந்துகொண்டு இவ் பாவனையோ அல்லது குறிப்புகளை பின்பற்றி செய்யவும்.

படம் : குகூள் & என் திறன் பேசி
Tags

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big