நாட்டின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘மஞ்சள் புள்ளிகளை கொண்ட வெட்டுக்கிளிகள்’ குறித்து அறிவிப்பதற்கு 1920 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்தை விவசாய திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த தொலைபேசி ஊடாக இத்தகைய வெட்டுக்கிளிகள் பற்றிய விபரங்களை வழங்குவதன் மூலம், அந்தந்த பிரதேசத்திலுள்ள விவசாய அதிகாரிகளின் வாயிலாக விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுக்குமென விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.எம். வீரகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குருணாகல், மாவத்தகம , கம்பஹா, மீரிகம, அம்பாந்தோட்டை ,கேகாலை, மாத்தறை ஆகிய இடங்களிலும் வெட்டுக்கிளிகளின் ஊடுருவல் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்கவில் இருந்து இந்தியா வரையில் தற்போது வியாபித்துள்ள பாலை வன வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
0 Comments